தகுதி
இந்த திட்டம், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1,20,000/- க்கு குறைவாக உள்ள குடும்பங்களுக்கு பொருந்தும். அவர்கள் கிராம நிர்வாக அலுவலரிடம் வருமான சான்று பெற்று குடும்ப அட்டையுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அட்டை வழங்கும் மையத்திற்கு சென்று முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட அட்டை பெற்றுக் கொள்ளலாம்.
குடும்பம் மற்றும் குடும்பத்தினரின் தகுதி விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 1. தகுதியுடைய நபரின் சட்டப்பூர்வமான மனைவி/கணவர் 2. தகுதியுடைய நபரின் குழந்தைகள் 3. தகுதியுடைய நபரை சார்ந்த பெற்றோர்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள நபர்களின் பெயர்கள் குடும்ப அட்டையில் இடம்பெற்றிருத்தல் வேண்டும். மற்ற மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு புலம் பெயர்ந்து ஆறு மாதத்திற்க்கு அதிகமாக தங்கி இருப்பவர்கள் இந்த திட்டத்தில் இணைய தமிழ்நாடு தொழில் துறையிலிருந்து சான்று பெற்று சமர்ப்பிக்கலாம். இத்திட்டத்தில், முகாம்களில் உள்ள இலங்கை அகதிகள், முகாம்களில் தங்கி இருப்பதற்க்கான சான்று இணைத்து எந்தவொரு வருமான சான்று இல்லாமல் சேரலாம்.